Nov 24, 2020

ஆறாதார அடைப்பு

வாழ்வாதாரம் தேடி 
துர்நாற்றம் சூழ்ந்து
பயத்தில் உழலல் 
மூலாதார பூட்டாம்

இன்பம் சிதறி
அருசுவை தவிர்த்து
குற்றவுணர்வும் தாழ்ச்சிகுணமும்
சுவடித்தன அடைப்பாம்

செல்வம் விலக
அழகுரசனை குன்றி
அவமானம் அணுகுதல்
மணிப்பூரக முடிச்சாம் 

சுற்றம் எதிர்க்க
அரவணைப்பு குன்றி
விநயம் சுருங்குதல்
அனாகத அணையாம்

கலாரசனை குன்றிட
நல்லிசை செவிமறுக்க
கலையின்றி வாழ்தல் 
விசுத்தி முறுக்காம்

இறைக்குரல் கேளாமை
உள்ளுணர்வு பொய்த்தல்
நினைத்ததங்கனமே நிறையாவிடில்
ஆக்கினை தாழாம்
Posted on by Hari

Nov 12, 2020

ஹைக்கூ

ருசிக்க மறந்தவன்!! 
செல் போனில் லாக் ஸ்க்ரீன் வால் பேப்பராக வைத்து மறந்தான்
தன் ரசனையை!

மழை!!
மார்கழியானால் பூமிக்கே ஜலதோஷம் பிடிக்கிறது,
மனிதன் எம்மாத்திரம்!

கனவு பலித்தது!!
இப்படி ஒரு பெண் வேண்டும் என்று
தவம் இருந்தான் ஒரு இளைஞன்.

சில வருடங்களில் கழிந்தது.
இறைவன் இளகினான்! தவம் பலித்தது!
அப்படியே ஒரு பெண் கிடைத்தால்.

அப்பாவென்று கட்டி அணைத்து
முத்தமிட்டாள்!

15 வருட கனவு!!
15 வருட கனவு நினைவானது.
ஜெர்மானிய வாகனம் வாங்கினான்.
பழகிய கனவின் துணை இன்றி,
தூக்கம் இழந்தான்!
Posted on by Hari