நினைவாற்றல் மூளையில் மட்டும் இல்லை!
உடலெங்கும் பரவி கிடக்கிறது.
நீர் நிலம் தீ காற்று ஆகாயம் என
பஞ்ச பூதத்தில் நிலைகொண்டுள்ளது
கற்றது கண்டது கேட்டது
புரிதல் உணர்ந்தவை நினைவுகள்
விருப்பு வெறுப்பு வன்மம்
இவை யாவும் தேங்கிருப்பது நீரில்
நம் முன்னோர் சேமித்த அறிவு
காலாவதியானதை கழற்றியும்
பயனலுள்ளதை பாதுகாத்தும்
மரபணுவின் கூறாய் மண்ணில் தெரியும்
உணர்வோட்டத்தில் வெப்பமேறி
உயிர் ஆவி மேலோங்க வெளிப்படும்
உக்கிரமும் வக்கிரமும் சினமும் சீற்றமும்
உடலிலுள்ள உஷ்ணத்தில் ஒடுங்கியுள்ளது
இப்புவியின் ரகசியங்கள்
சூரிய சந்திர ஆட்டத்தின் விளைவும்
பஞ்ச கிரஹங்களின் விசையும்
வியாழன் வழங்கிய காற்றில் உள்ளது
அகிலத்தின் இயக்கம்
கர்மவினை பெட்டகம்
மாசற்ற ஆன்ம உலகம்
ஆகாய பூதத்தில் நிலைகொண்டுள்ளது
ஓட்டம் அடங்கி உள்முகம் பார்த்தால்.. நீர் நினைவுகள் தெளியும்!
காமம் கடந்து விந்து கட்டினால்.. நிலம் ஒடுங்கி மரபணு மாறும்!
உணர்வுகள் சீண்டா புத்தநிலையில்.. தீயின் தாக்கம் அண்டாது!
உடலை கடந்து உயிர் வியாபித்தால்.. காற்று பூதம் கைவல்யமாகும்!
கர்மா வினை முழுதும் கரைந்தால்
ஆகாய ஏடுகள் கேட்டுணரலாம்!
இறையருளும் சித்தராசியும் பெற்றால்
தக்கதொரு அறிவை ஆகாயத்தில் பதிவிடலாம்!
Dec 13, 2023
Subscribe to:
Comments (Atom)