May 22, 2019

பசி.. பிணி.. மூப்பு!

பசி.. பிராண விரயத்தின் பின்விளைவு!
ஆட்டம் நடை பேச்சு எண்ணம்
போன்ற செயலின் எரிபொருள் பிராணன்!
காய் கனி இலை தழை விதையில்
தனது பிராணனை அடக்கி காத்து,
பிற உயிர்களுடன் பகிரும் தாவரங்களை
உண்டு பசியாற்றும் மனித இனமே,
அத்தவிரங்களுக்கு ஏதேனும் கைமாறு செய்வாயோ?
உனது ஜீவனை என்றேனும் காக்க முயல்வாயோ?
பிரவுயிருடன் பகிரும் யுக்தியை பயில்வாயோ?

பிணி.. அத்துமீறிய பிராண விரயத்தின் எதிர்வினை!
இவ்வுடலை சீர்படுத்தி தக்கவெக்க
உயிர் எடுக்கும் ஓர் முயற்சி!
அம்முயற்சியை தடுக்கும் ரசாயினத்தை உண்டு,
உடலையும் மனதையும் மேலும் வருத்தி,
உயிரையும் படைப்பையும் நிந்தித்தாலும்,
தன் முயற்சியை கைவிடாது போராடும் உயிரை
ஒருமுறையேனும் உணர்ந்தால் போதும்,
பிணியை கடந்து, மனமும் அடங்கி,
இவுடலுக்குள் ஜீவனை நித்திய மாக்கிடலாமே!

மூப்பு.. ஜீவ சோர்வின் பிரதிபலிப்பு!
நிதமும் பிறைபோல் தேய்ந்து வளர்ந்து,
பொலிவிழந்து சோர்வடைந்த உயிரின் தளர்ச்சி!
இளமை அழகு வீர்யம் என்ற ஆணவத்தை சுருக்கி,
பொருள் புகழ் போன்ற மாயையின் தாக்கம் குறைத்து,
இன்ப துன்ப அனுபவங்களில் கன்மத்தை கரைத்து,
இவுடலை சிரமமின்றி கைவிட பழக்கும்
உயிரின் கருணையே மூப்பும் மரணமும்!
மாண்டவர் நினைவால் சுரக்கும் கண்ணீரின் புனிதம்,
கடமைக்கு வழியும் கண்ணீரில் நீர்த்துப் போகலாமா?
Posted on by Hari

May 20, 2019

விகற்பம்.. ஆணவம்.. மாயை.. வலி..

விகற்பமே வாழ்வின் ஆதாரம்
இவ்வுயிரை உடலோடு ஒட்டிய பசை!

ஆணவமே செயலின் தூண்டுகோல்
எண்ணத்தை ஒலிஒளி யாக்கும் துடுப்பு!

மாயையே மேடையேறும் களம்
அநித்ய அனுபவங்கள் அவசிய உளியடி!

வலியே காயத்தின் நண்பன்
கவனத்தை ஈர்த்து குணப்படுத்தும் யுக்தி!

கடன் வாங்கிய அர்த்தங்களை ஆராய்ந்து பார்
ஆழமறிந்து வாழ்ந்து தொய்ந்து கடந்தும் கான்!
Posted on by Hari