my dad is the best!
என்று சொல்ல மகள் தயங்கினால்,
தந்தை என்ற பட்டத்திற்கு
தகுதி அற்றவன் நீ!
எவனோ ஒருவன் அவதூறு பேச,
அதை சொல்ல நீ யார்? என்று
வரிந்து கட்டிய மனைவியின்
குரல் சொல்லும் உன் புருஷ லக்ஷணம்!
உன் உடலில் குருதி சிந்தினால்,
தந்தையின் நெஞ்சில் ரௌத்திரமும்
தாயின் கண்ணில் நாளங்களும்
வெடிக்காவிடில், பூமிக்கே பாரம் நீ!
சிக்கலில் மாட்டி திணறும்
சக ஊழியன், உன்னை கண்டதும்
அப்பாடா! என்று பெருமூச்சு விடாவிடின்,
நீ இருந்து என்ன பயன்?
என்று சொல்ல மகள் தயங்கினால்,
தந்தை என்ற பட்டத்திற்கு
தகுதி அற்றவன் நீ!
எவனோ ஒருவன் அவதூறு பேச,
அதை சொல்ல நீ யார்? என்று
வரிந்து கட்டிய மனைவியின்
குரல் சொல்லும் உன் புருஷ லக்ஷணம்!
உன் உடலில் குருதி சிந்தினால்,
தந்தையின் நெஞ்சில் ரௌத்திரமும்
தாயின் கண்ணில் நாளங்களும்
வெடிக்காவிடில், பூமிக்கே பாரம் நீ!
சிக்கலில் மாட்டி திணறும்
சக ஊழியன், உன்னை கண்டதும்
அப்பாடா! என்று பெருமூச்சு விடாவிடின்,
நீ இருந்து என்ன பயன்?