Dec 23, 2019

உண்மை என்பது உணர்வு

உண்மை என்பது உணர்வு.
அன்பில் உண்டு, அறிவில் இல்லை!
உணர மட்டுமே முடியும், அறியலாகாது!

அறிவு என்பது வெறும் எண்ண குவியல்.
உச்சரிக்க பட்ட ஒவ்வொரு வார்த்தையும் பொய்யே!
ஒவ்வொரு செயலும் முழுமையற்றதே!

சொல்லிலும் செயலிலும் உண்மையை தேடாதே!
அவற்றை தூண்டிய உணர்வே உண்மையின் ஊன்றுகோல்.
உணர்வற்ற செயலில் உண்மையே இல்லை.

உணர்வை உணர்வால் மட்டுமே வெளிப்படுத்த இயலும்.
உண்மையை உணர மட்டுமே முடியும்.
அவ்வுண்மையை உணர்கையில் உயிர் முழுமைகாணும்.
Posted on by Hari

மூடனும்.. தெய்வமும்..

மூடன் - பெண்பால் இணை அற்ற சொல்!

பெண்மையில் மூடமையே இல்லை!
மூடரை மீட்டெடுக்க வந்த தெய்வங்களே பெண்கள்!
உன் மூடமையின் விளைவுகளை தான் ஏற்று உன்னை காக்கும் தெய்வம்.

பல தெய்வங்கள் காலில் விழ அனுமதிக்கும்...
தன் வலியை தானே ஆற்ற தெரிந்த அன்னையர் அவர்
உன் ஆணவம் தேய அத்தெய்வம் அளிக்கும் ஓர் வாய்ப்பு!

சில தெய்வங்கள் உன் மார்பில் சாய்ந்து தன் வலி ஆற்றும்...
சங்கமத்தில் உன் ஆணவம் கரையாவிடின்,
ஆண்மகனை ஈன்றெடுத்துத் தன் தவத்தை தொடரும்!

சாய்ந்த தெய்வம் சாந்தி அடைந்தால்,
உன் குலதெய்வமே உன் மடியில் விளையாடும்,
கொஞ்சி இன்புற வாய்ப்பளிக்கும்!

தெய்வம் - ஆண்பால் இணை அற்ற சொல்!
Posted on by Hari

Nov 13, 2019

உடல்.. மனம்.. உயிர்

உடல் பூமி
உயிர் சூரியன்
மனம் சந்திரன்

பூமியின் சுழற்சி உடல் வளர்க்கும்
சூரியன் எழாவிடின் யாவும் உயிரிழக்கும்
சந்திரனோடு மனம் விரிந்து சுருங்கும்

உடல் நிலம்
உயிர் விதை
மனம் நீர்

நிலத்திறன் வெளிப்பட விதை தேவை
விதை மரமாக நிலம் தேவை
நிலம் விளைய நீர் தேவை!

உடல் பசு
உயிர் பதி
மனம் பாசம்

உடலுக்கு உருக்கொடுத்தவள் தாய்
உயிர் ஊற்றியது தந்தை
மனதின் ஆக்கம் உன் கிரகிப்பு!

உடல் இயக்கம்
உயிர் சாத்தியம்
மனம் தோணி

உயிரற்ற உடல் பிணம்
உடலற்ற உயிர் ஆன்மா
உடலற்ற மனம் எண்ணம்

உடல் சக்தி
உயிர் சிவம்
மனம் சுவாசம்

மனதின் சேவகன் உடல்
மனதின் எரிபொருள் உயிர்
மனதின் உபபொருள் சுவாசம்!

ரத்தம் சக்தி
நிணநீர் சிவம்
தட்டு மனம்

ரத்தம் உடல் காக்கும்
நிணநீர் உயிர் காக்கும்
தட்டுகள் இவற்றின் பாலம்!

அணுவின் நேர்மின் சிவம்
அணுவின் எதிர்மின் சக்தி
நொதுமி சுவாசம்

கருவில் அமர்ந்து ஈர்ப்பது சிவம்
அணுகரு சுற்றி ஆற்றல் பெருக்கும் சக்தி
சக்தியின் ஆற்றலை வெளிக்கொணரும் நொதுமி!

செயல் சக்தி
கொள்கை சிவம்
எண்ணம் சுவாசம்

ஆற்றல் தாயின் தூண்டுதல்
அறம் தந்தையின் பொறுப்பு
அறிவு உனது வெளிப்பாடு!

அகாரம் சக்தி
உகரம் மனம்
மகரம் சிவம்

அகாரம் கனல் காற்று
உகரம் குளிர் காற்று
மகரம் அமுத காற்று!

உடல் சக்தி
மனம் சுவாசம்
உயிர் சிவம்

சக்தி விரயம் நிறுத்தி
சுவாசம் நெறிப்பட்டு
சிவத்தை உணர்வதே தவம்!
Posted on by Hari

Aug 5, 2019

இயற்கை நிலை


ஆரோக்கியம் ஆடம்பரம் அல்ல
உடலின் இயற்கை நிலை!
மனதின் போக்கு உடலை வருத்தும்
கர்மம் கரைய தானே மேம்படும்
ஒழுக்கமே ஆரோகியத்தின் திறவுகோல்

அமைதி தேடிசெல்லும் பொருள் அல்ல
மனதின் இயற்கை நிலை!
உணர்ச்சிகளின் கூச்சல் மதி மயக்கும்
மாயை விலக தானே வெளிப்படும்
மன்னிப்பும் நன்றியுணர்வும் வழிவகுக்கும்

ஆனந்தம் அறிய பொக்கிஷம் அல்ல
ஜீவனின் இயற்கை நிலை!
தான் என்று இருப்பவன் அறியலாகாது
ஆணவம் அழிய அனுபவம் வாய்க்கும்
சரணாகதியே பரமானந்தத்தின் பாதை
Posted on by Hari

Jun 7, 2019

நடத்தைக்கு சான்றளிக்கும் சமூகம்

அகந்தையின் உச்சத்தில் வெளிப்படும் கருணையினும்,
அக்கறையின் காரணத்தால் பொங்கிவரும் கோவம் தூயதே!

காமத்தின் தூண்டுதலால் கண்டெடுக்கும் காதலினும்,
காதலின் கொண்டாட்டமாய் வெளிப்படும் காமம் புனிதமே!

மற்றவளை மனதில் கொண்ட மஞ்சத்தின் கொஞ்சலினும்,
தன்னை முழுமனதோடு விலக்கும் வெறுப்பு சிறந்ததே!

உன் உயர்வை அரைமனதோடு ஏற்கும் வாழ்த்தினினும்,
பொறாமையில் வெம்பி உதறும் தவிப்பு உன்னதமே!

இதை கொடு அதை கொடு என்பவனின் பக்தியினும்,
என் வினை என் பலன் என வாழும் பகுத்தறிவு மேலானதே!

வெளிப்படும் நடத்தையை கண்டு ஏமாறும் முன்,
அதன் பின் உள்ள தூண்டலை உணர முயல்வோமா?
Posted on by Hari

May 22, 2019

பசி.. பிணி.. மூப்பு!

பசி.. பிராண விரயத்தின் பின்விளைவு!
ஆட்டம் நடை பேச்சு எண்ணம்
போன்ற செயலின் எரிபொருள் பிராணன்!
காய் கனி இலை தழை விதையில்
தனது பிராணனை அடக்கி காத்து,
பிற உயிர்களுடன் பகிரும் தாவரங்களை
உண்டு பசியாற்றும் மனித இனமே,
அத்தவிரங்களுக்கு ஏதேனும் கைமாறு செய்வாயோ?
உனது ஜீவனை என்றேனும் காக்க முயல்வாயோ?
பிரவுயிருடன் பகிரும் யுக்தியை பயில்வாயோ?

பிணி.. அத்துமீறிய பிராண விரயத்தின் எதிர்வினை!
இவ்வுடலை சீர்படுத்தி தக்கவெக்க
உயிர் எடுக்கும் ஓர் முயற்சி!
அம்முயற்சியை தடுக்கும் ரசாயினத்தை உண்டு,
உடலையும் மனதையும் மேலும் வருத்தி,
உயிரையும் படைப்பையும் நிந்தித்தாலும்,
தன் முயற்சியை கைவிடாது போராடும் உயிரை
ஒருமுறையேனும் உணர்ந்தால் போதும்,
பிணியை கடந்து, மனமும் அடங்கி,
இவுடலுக்குள் ஜீவனை நித்திய மாக்கிடலாமே!

மூப்பு.. ஜீவ சோர்வின் பிரதிபலிப்பு!
நிதமும் பிறைபோல் தேய்ந்து வளர்ந்து,
பொலிவிழந்து சோர்வடைந்த உயிரின் தளர்ச்சி!
இளமை அழகு வீர்யம் என்ற ஆணவத்தை சுருக்கி,
பொருள் புகழ் போன்ற மாயையின் தாக்கம் குறைத்து,
இன்ப துன்ப அனுபவங்களில் கன்மத்தை கரைத்து,
இவுடலை சிரமமின்றி கைவிட பழக்கும்
உயிரின் கருணையே மூப்பும் மரணமும்!
மாண்டவர் நினைவால் சுரக்கும் கண்ணீரின் புனிதம்,
கடமைக்கு வழியும் கண்ணீரில் நீர்த்துப் போகலாமா?
Posted on by Hari

May 20, 2019

விகற்பம்.. ஆணவம்.. மாயை.. வலி..

விகற்பமே வாழ்வின் ஆதாரம்
இவ்வுயிரை உடலோடு ஒட்டிய பசை!

ஆணவமே செயலின் தூண்டுகோல்
எண்ணத்தை ஒலிஒளி யாக்கும் துடுப்பு!

மாயையே மேடையேறும் களம்
அநித்ய அனுபவங்கள் அவசிய உளியடி!

வலியே காயத்தின் நண்பன்
கவனத்தை ஈர்த்து குணப்படுத்தும் யுக்தி!

கடன் வாங்கிய அர்த்தங்களை ஆராய்ந்து பார்
ஆழமறிந்து வாழ்ந்து தொய்ந்து கடந்தும் கான்!
Posted on by Hari