Dec 13, 2023

பஞ்ச பூத நினைவாற்றல்

நினைவாற்றல் மூளையில் மட்டும் இல்லை!
உடலெங்கும் பரவி கிடக்கிறது.
நீர் நிலம் தீ காற்று ஆகாயம் என
பஞ்ச பூதத்தில் நிலைகொண்டுள்ளது

கற்றது கண்டது கேட்டது
புரிதல் உணர்ந்தவை நினைவுகள்
விருப்பு வெறுப்பு வன்மம்
இவை யாவும் தேங்கிருப்பது நீரில்

நம் முன்னோர் சேமித்த அறிவு
காலாவதியானதை கழற்றியும்
பயனலுள்ளதை பாதுகாத்தும்
மரபணுவின் கூறாய் மண்ணில் தெரியும்

உணர்வோட்டத்தில் வெப்பமேறி
உயிர் ஆவி மேலோங்க வெளிப்படும்
உக்கிரமும் வக்கிரமும் சினமும் சீற்றமும்
உடலிலுள்ள உஷ்ணத்தில் ஒடுங்கியுள்ளது

இப்புவியின் ரகசியங்கள்
சூரிய சந்திர ஆட்டத்தின் விளைவும்
பஞ்ச கிரஹங்களின் விசையும்
வியாழன் வழங்கிய காற்றில் உள்ளது

அகிலத்தின் இயக்கம்
கர்மவினை பெட்டகம்
மாசற்ற ஆன்ம உலகம்
ஆகாய பூதத்தில் நிலைகொண்டுள்ளது

ஓட்டம் அடங்கி உள்முகம் பார்த்தால்.. நீர் நினைவுகள் தெளியும்!
காமம் கடந்து விந்து கட்டினால்.. நிலம் ஒடுங்கி மரபணு மாறும்!
உணர்வுகள் சீண்டா புத்தநிலையில்.. தீயின் தாக்கம் அண்டாது!
உடலை கடந்து உயிர் வியாபித்தால்.. காற்று பூதம் கைவல்யமாகும்!

கர்மா வினை முழுதும் கரைந்தால்
ஆகாய ஏடுகள் கேட்டுணரலாம்!
இறையருளும் சித்தராசியும் பெற்றால்
தக்கதொரு அறிவை ஆகாயத்தில் பதிவிடலாம்!

Posted on by Hari

Nov 19, 2023

நவகிரஹ வழிபாடு

கிழக்கு நோக்கி
உயிரூற்றும் சூரியன்
அறிவூற்றும் புதன்
உணவூற்றும் சுக்கிரன்

தெற்க்கை நோக்கி
வீரியம் சுரக்கும் அங்காரன்
கொடுத்து கர்வமூட்டும் ராகு
கெடுத்து விரக்தியேற்றும் கேது

மேற்க்கே பார்த்து
தர்மம் காட்டும் சனீஸ்வரர்
கர்மம் கரைக்கும் சந்திரன்

வடக்கு நோக்கி
ஞானம் புகட்டும் குரு

என ஒன்பது கோள்களும்
நமது மேம்பாட்டின் அளவுகோல்
நமது போக்கின் வழிகாட்டிகள்
நமது சுயசோதனைச் சாவடிகள்

ஒன்பது முறை சுற்றி வந்து
விண்ணப்பித்து செல்லும் சடங்கல்ல!

ஒவ்வொன்றின் பயனுர்ந்து,
பணிந்து வணங்கி,
நன்றியுரைத்து பாருங்கள்!

சர்வ தோஷங்களும் விலகும்,
அனைத்து பாடங்களும் விளங்கும்!

Posted on by Hari

Nov 2, 2023

என் செயலா?

தக்கத் தகுதியில் நாட்ட மூட்டுவாய்
தகுந்த சூழலில் புகுத்திடுவாய்
புகுந்த செயலில் துணைநின்று வழிநடத்துவாய்

இதில் என் செயலென கூறுவதெங்கனே!
கர்வம் தலை தூக்குவதில்லையே!
Posted on by Hari

Sep 14, 2023

எது உன்னுடையது?

நீ சேர்த்த பொருள் உன்னுடையதல்ல!
பின் ஒரு தேவைக்கு பயன்படும்,
அதுவரை நீயே தக்க ரக்ஷகன்,
என்று உன்னிருப்பு வைத்தது தேவதைகள்.

உன் சுற்றம் நீ சேர்த்ததல்ல!
உன் வினைகளை கரைக்க,
ஒத்த வினையுடையோரை உன்னருகில் சேர்த்து,
வினை கரைந்ததும் விலக்கிடும் ஓர் பிரம்ம சூத்திரம்.

உன் ஆரோக்கியம் நீ சமைத்ததல்ல!
சொல் செயல் சிந்தனை என்ற மும்முனை தாக்குதலும்,
அதனை தீவிரமாக ஏற்றுக்கொண்டதால்
ஏற்பட்ட உணர்வோட்டத்தின் விளைவும்.

இக்கட்டில் சிக்கி தவிக்கும் சாமானியனை
காத்து கரையேற்ற முயலும் துணிவும் உன்னுடையதல்ல!
அச்சாமானியனின் குலம் காக்கும் தெய்வம்
உன்னுள் புகுந்து செயல்படுதலே.

தகுதி மட்டுமே உன்னுடையது!

தேவதைகள் பொருள் காக்க உன்னை தேர்வதும்,
நல்லோரை உன்னருகில் கொண்டு சேர்ப்பதும்,
உடலை உணர்வு தாக்காமல் காப்பதும்,
துணிவு ஈர்ப்பு ஈகை உன்னுள் ஊற்றுவிப்பதும்,
உன் தகுதியை பொறுத்தே!
அத்தகுதியை திரட்டுவது மட்டுமே உன் அறம்.

மனம்போல் வாழ்!
சான்றோன் மனம் கோணாமல் வாழ்!
இறைவன் முன் தலைகுனிவு ஏற்படுத்தும் செயல்களை தவிர்.
நிமிர்ந்து நட! நேர்கொண்டு பார்!

உன் தகுதியை அளக்க தகுந்தோரை மட்டும் வணங்கு,
அவர் கருத்திற்கு மட்டும் செவி சாய்!
தனது விருப்பத்தை உன்மேல் திணித்து தவிக்கும் சாமானியரை,
மன்னித்து பழகு! முன்வினையை தீர்க்க வந்தோர் என ஏற்று ஒழுகு!
Posted on by Hari

May 5, 2023

you are not free..

you are not free..
your guardians guard you
your caretakers feed you
your teachers mould you

you are not free..
you care to impress
you desist to express
you clench and depress

you are not free..
you strive to explain
you shrive to disdain
you thrive to disguise

you are not free..
you work to earn
you play their game
you are not the same

you are not free..
you wallow in attention
you swallow the affront
you borrow their dreams

you are not free..
you've earned enough
you've lost your virile
you're adrift from purpose

you are not free..
you want to be someone else
you want to be somewhere else
you want something else

you are not free..
they can scare you
a lot can lure you
the past still scar you

you are not free..
you seek revenge
you lack courage
you yearn homage

you are not free..
you want to be solaced
you cling to your shackles
you blame every thing else

you are not free..
you're contemptous
you're judgemental
despicably sanctimonious

you are not free..
you are conditioned not to be
you may rebel to be free
that rebellion ties you back to the tree

you are not free..
you don't recognize the free
you can't accept the free
you heckle them free

you are not free..
stop the blame
seek the free
find your thee
Posted on by Hari

Apr 18, 2023

ஃப்ரெண்ட்

ரசனையில் ஒன்றுபட்டோர் தோழன் தோழி
இலக்கால் ஒன்றுபட்டோர் சகா சகி
தனித்தன்மையால் ஈர்க்கப்ப பட்டவர் சிநேகிதன் சிநேகிதி
நம்பிக்கையின் மூலதனத்தில் இணைந்தவன் நண்பன்

ஆயிரம் ஆதாரங்கள் முன்வைத்தாலும்
மனம் ஏற்க மறுக்கும் நம்பிக்கையே நட்பு
பெண்ணுக்கு கற்பை போல்
ஆணுக்கு நட்பு பிரத்தியேகம்
Posted on by Hari

Apr 13, 2023

விதி மதி கதி பதி

விதி பிடியில் இருகச் சிக்கிய தரித்திரர்கள்
மதிகொண்டு முன்னேற முயலும் மனிதர்கள்
கதிகண்டு பரியேரும் யோக்கியர்கள்
பதிகண்டு லயித்திருக்கும் பாக்கியர்கள்

என ஆனைவரும் கூடி வாழும் இவ்வுலகில்
சதி செய்து விதி வென்றோர் யாரும் இல்லை!
மதியினால் கதி கண்டோர் யாரும் இல்லை!
கதி மட்டுமே கொண்டு பதி கண்டொர் யாரும் இல்லை!
Posted on by Hari

Feb 19, 2023

இறைவா போற்றி

இறைவா போற்றி!
ஜோதியாய் நின்று எம்மை அசைக்கும் அருளே போற்றி
அசைவதற்கு நீ அளித்த கதியே போற்றி
உனதாற்றல் உணர்விக்கும் ஜீவனே போற்றி
உன்னை உணர வழிவகுக்கும் உயிரே போற்றி
உன்னை அறிய நீ அளித்த உடலே போற்றி
உடலில் நீ கொடுத்த பலமே போற்றி, மனத் திடமே போற்றி
ஓயாமல் ஊக்குவிக்கும் உன் விசையே போற்றி

செல்வங்கள் கொடுத்து நிறைவை அளித்தாய் நின் தயவே வாழ்க
இன்பங்கள் காட்டி களங்கங்கள் களைத்தாய் நின் பரிவே வாழ்க
மகிழ்வை ஊட்டி மனதை நிறைந்தாய் நின் தாய்மை வாழ்க
ஆனந்தம் அளித்து முழுமை கொடுத்தாய் நின் கருணை வாழ்க

மாயை விளக்கி தெளிவை அளித்த குருவே சரணம்
அறிவை தீட்டி ஞானம் புகுத்தும் குருவே சரணம்
ஞானம் காட்டும் பாதையில் நிந்தன் பாதம் சரணம்
இறைவா சரணம்
சரணம் சரணம்
Posted on by Hari