Dec 27, 2021

கண்ணாடி

கண்ணாடி இருக்க
கண்நாடி காணான்
கண்நாடி கண்டபின்
கண்ணாடாதிருப்பனே
Posted on by Hari

Dec 11, 2021

எது பெண்ணியம்?

கலையே வா நீ என்றிருக்க கலைவாணி
இலக்கை அடைய முனைவோருக்கு இலக்குமி
பார் வகார தீ என்றுணர்த்தும் பார்வதி
அண்ணாக்கின் மேல் பூரணத்தை காண அன்னபூரணி
ஆன்ம விளக்கிற்கு காயமே திரி என்று காயத்திரி
பூமி மாரி பச்சை நீலம் என அனைத்தையும் அன்னையாய்
வணங்கி வாழும் வாழையடி வாழை மரபில் வந்தோர் நாம்!

மூடகங்கள் பயில்விக்கும் பெண்ணிய கருத்துகளை கேட்டு
முனிவர்கள் வகுத்த கோட்பாட்டை கெக்கலிக்கலாமா?

Posted on by Hari

Dec 5, 2021

செல்வம் ஈர்க்க..

சாரா பிறர்க்கு, தீமை நினைப்பவன்
அற்பத்தனம், மனதில் கொண்டவன்
நன்மை செய்து, பெருமிதம் கொள்பவன்
செல்வ தேவதைகளை ஈர்க்கலாகாது!
Posted on by Hari

Oct 18, 2021

ஆன்+மீகம்

ஆன்மாவை கண்டறிந்து
உறவாடி உள்ளுணர்ந்து
ஆன்மாற்றலை மீகப்படுத்துவது
ஆன்மீகம்!

இவ்வித்தையை அறிந்தோர்
கவனச்சிதறல் அகற்றி
வந்த வேலையை அறிந்து
சரிவர செய்ய சித்தமாய் இருப்பர்

வேலை காலம் வரும் வரை
ஆன்மாவோடு லயித்திருந்து
தக்க சமயத்தில்
செயல் புரிவர்

தடைகள் தானே கரையும்
அவத்தைகள் விலகும்
விருப்பங்கள் நிறைவேறும்
வினைகள் தொற்றாது
Posted on by Hari

Jun 1, 2021

ஆரோக்கியம்

தேவைக்கு மிஞ்சிய பொருள் வளம் ஒரோக்கியம்
பிணி அற்ற அவயவங்கள் ஈரோக்கியாம்
நின்ற மதியெனும் நிம்மதி மூவோக்கியம்
பசி அணுகா உடலியக்கம் நாலோக்கியம்
மூப்பை வென்ற முறியா இளமை ஐயோக்கியம்
எல்லா உயிரையும் இன்புற பேனிக்கும் அருள் ஆரோக்கியம்
Posted on by Hari

Jan 22, 2021

ஞாலத்திருக்கு மூலையில்லை

ஞாலத்திருக்கு மூலையில்லை
ஞானத்திற்கு மொழியில்லை

மொழியும், அதில் இயற்றப்பட்ட திருமறைகளும், 
ஞான கருத்தினை சொரியும் வாக்கியங்களும்  
அதில் அடங்கியிருக்கும் அர்த்தங்களும்
வழிகாட்டிகளே அன்றி வேலியல்ல.

தமிழுக்குள் முடங்கி கிடைக்கும் ஞானத்தை,
உலகிற்கு கொண்டு சேர்ப்போம்
யாம் பெற்ற இன்பம், 
உலகியலீர் யாவர்க்கும் எட்ட செய்வோம்!
Posted on by Hari