என்குணத்தான் இறைவன் முழு சுதந்திரன்!
முழு சுதந்திரம் என்பது யாதெனின்;
முழு சுதந்திரம் என்பது யாதெனின்;
காணொன்ன வற்றின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை
இதுவல்லது அதுவென்ற மட உகப்பிலிருந்து விடுதலை
விருப்பு வெறுப்பு அவாவிலிருந்து விடுதலை
எவரும் எவ்வுணர்ச்சியும் தூண்டொன்னா விடுதலை
பிணிநெருங்கா ருசிஊறா பெருமையுறா விடுதலை
தான் தூண்டா பசி என்றும் நெருங்கா விடுதலை
அனுமதியின்றி ஜீவ விரயத்திலிருந்து விடுதலை
தன் ஆணையின்றி உடலை உயிர் பிரியா விடுதலை
தான் தூண்டா பசி என்றும் நெருங்கா விடுதலை
அனுமதியின்றி ஜீவ விரயத்திலிருந்து விடுதலை
தன் ஆணையின்றி உடலை உயிர் பிரியா விடுதலை
இவையின்றி நான் சுதந்திரன் என்று முழங்கலாகுமோ?
சட்ட திட்டங்கள் சீண்டா விடுதலை
பாசபிணைப்பில் ஒடுங்கா விடுதலை
மன சுருள்கள் சுருக்கா விடுதலை
உடல் வரம்பு இருக்கா விடுதலை
உடலை பிரிந்த உயிருக்கே உரிய விடுதலை
உயிர் நிலையில் வாழ்வோர் மட்டும் உணர்ந்த விடுதலை
இவ்விடுதலை கண்டோரை கண்டால் அறிவீர்,
சுதந்திரம் ஒன்றே அர்த்தமுள்ள நாட்டம்!