என்னிடம் இருந்தது அமைதி ஒன்று தான்
பசியில் தொலைத்தேன்
பாலருந்தி மீட்டெடுதேன்
அன்பிற்கு அழுது தொலைத்தேன்
கட்டி அணைத்து திரும்ப கொடுத்தாள்
தோல்வியில் தொலைத்தேன்
வெற்றியில் மீட்டேன்
மீட்டது தோற்றவனின் அமைதி
எனதில்லை என்றுணர்ந்தேன்
மதிப்பிற்கு புகழுக்கும் தொலைத்தேன்
வீண்செயல் என்றுணர்ந்தேன்
அழகில் விரைந்து தொலைத்தேன்
பயனில்லை என்றுணர்ந்தேன்
அறிவு ஆற்றல் என தொலைத்தேன்
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
கதை காவியங்களில் தேடினேன்
ஞானியார் சொற்களில் தேடினேன்
தனிமையில் தேடினேன்
என்னுள் தேடினேன்
ஆழ தோண்டி
பேரமைதி மீட்டெடுதேன்
என்னிடம் இருப்பது அமைதி ஒன்று தான்
உயிரற்ற உறவுகளை நீட்டாதீர்
என்னமைதிக்கு அது ஒப்பில்லை
நாணயங்களுக்கு விலைபேசாதீர்
பரிமாற நான் தயாரில்லை
செல்வாக்கால் பறிக்க முடியாது
அமைதி சூக்ஷம பொருள்
மாசற்ற பேதைமை அமைதிக்குலைத்தால்
மன்னித்து மீட்டுக்கொள்வேன்
நிறைந்த பணிவிற்கு
தற்காலிகமாக தள்ளி வெப்பேன்
தூய அன்பிற்கு
எடைக்கு எடை பண்ட மாற்றுவேன்
அனுபூதிக்கும் அருளுக்கும்
கைமாறு கொடுப்பேன்
இறைவனின் ஆசிக்கு
முழுதும் ஆஹுதி அளிப்பேன்
Sep 23, 2024
உன் மெய் விளங்கும்
அபயம் உணர்ந்து
நிராசை விளங்கி
விநயம் பழகும்
ஜீவனுக்கே சமூகம் இடர்
உடலியக்கம் சீர்பெற்று
உள்ளடக்கம் வாய்க்கப்பெற்று
அறிவு தெளிந்து உலவும்
ஞானியருக்கே மெய் விளங்கும்
நிராசை விளங்கி
விநயம் பழகும்
ஜீவனுக்கே சமூகம் இடர்
உடலியக்கம் சீர்பெற்று
உள்ளடக்கம் வாய்க்கப்பெற்று
அறிவு தெளிந்து உலவும்
ஞானியருக்கே மெய் விளங்கும்
Sep 3, 2024
கலையின் தாத்பரியம் என்ன?
காரியம் உடல்கொண்டு செய்யப்படுவது
கருத்து அறிவை கூறு போடுவது
கலை என்பது உணர்வோடு உறவாடுவது
அது மூன்று நிலைகளில் முதிரும்
கலையின் முதல் நிலை
அடிப்படை அறிதல்
அதன் அறிவியல் பயின்று
பழகி படிப்படியாய் தேறுதல்
கலையின் இரண்டாம் நிலை
ஒரு உணர்வை சிறப்பாக வெளிப்படுத்துதல்
பாரதி கவிதை போல்
நன்நடிகனின் நடிப்பை போல்
கலையின் முதிர்ந்த நிலை
சுவைப்பவரின் உணர்வை முழுதாய் ஆக்கிரமித்தல்
உள்ளிறங்கி கண் கலக்கும் பாடல் போல்
திண்ணனின் காதல் கதையை போல்
முதிர்ந்த கலை ஆணவம் அழிக்கும்
முதிர்ந்த பின் தானே உதிரும்
கலைவாணியின் அருள் இன்றி முதிராது
நான் அகன்று அவள் செயல்பட திகட்டாது
கருத்து அறிவை கூறு போடுவது
கலை என்பது உணர்வோடு உறவாடுவது
அது மூன்று நிலைகளில் முதிரும்
கலையின் முதல் நிலை
அடிப்படை அறிதல்
அதன் அறிவியல் பயின்று
பழகி படிப்படியாய் தேறுதல்
கலையின் இரண்டாம் நிலை
ஒரு உணர்வை சிறப்பாக வெளிப்படுத்துதல்
பாரதி கவிதை போல்
நன்நடிகனின் நடிப்பை போல்
கலையின் முதிர்ந்த நிலை
சுவைப்பவரின் உணர்வை முழுதாய் ஆக்கிரமித்தல்
உள்ளிறங்கி கண் கலக்கும் பாடல் போல்
திண்ணனின் காதல் கதையை போல்
முதிர்ந்த கலை ஆணவம் அழிக்கும்
முதிர்ந்த பின் தானே உதிரும்
கலைவாணியின் அருள் இன்றி முதிராது
நான் அகன்று அவள் செயல்பட திகட்டாது
இயல் இசை நாடகம்
முதிர்ந்த ஆன்மாக்களுக்கு, இயல் ஒன்றே போதும்!
சொல்லும் கருத்தினை சட்டென்று உள்வாங்குவர்.
தளர்ந்த ஆன்மாக்கள் இசைக்கு மயங்குவர்
பலமுறை கேட்டு, ஒத்திசைத்து கருத்தினை கிரஹிப்பார்.
இளைய ஆன்மாக்களுக்கு, மாயை தேவை!
நடனமும் நாடகமும் உணர்வை பெருக்கும்.
அக்கதாப் பாத்திரமாகி, தன்னையே மறப்போர்,
உள்ளிறங்கி கருத்தினை உணர்வர்.
இளைய குழந்தைக்கு அதிக கவனமூட்டும் அன்னை போல்
வாழ்க்கையும் ஏராள நாடகம் இயற்றி,
இளைய ஆன்மாக்களை கரை தேற்றுவதிலே
அதிக நேரமும் சக்தியும் செலவிடும்.
முதிர்ந்த ஆன்மாக்கள் வெகு சிலரே!
"காதற்ற ஊசியும் வராது காண் கடைவழிக்கே" போன்ற ஒரு வாக்கியம் போதும்,
வாழ்கை போக்கையே மாற்றிக்கொள்ள,
இசை இயற்றி நடுத்தர ஆன்மாக்களுக்கு துடுப்பு நீட்ட!
சொல்லும் கருத்தினை சட்டென்று உள்வாங்குவர்.
தளர்ந்த ஆன்மாக்கள் இசைக்கு மயங்குவர்
பலமுறை கேட்டு, ஒத்திசைத்து கருத்தினை கிரஹிப்பார்.
இளைய ஆன்மாக்களுக்கு, மாயை தேவை!
நடனமும் நாடகமும் உணர்வை பெருக்கும்.
அக்கதாப் பாத்திரமாகி, தன்னையே மறப்போர்,
உள்ளிறங்கி கருத்தினை உணர்வர்.
இளைய குழந்தைக்கு அதிக கவனமூட்டும் அன்னை போல்
வாழ்க்கையும் ஏராள நாடகம் இயற்றி,
இளைய ஆன்மாக்களை கரை தேற்றுவதிலே
அதிக நேரமும் சக்தியும் செலவிடும்.
முதிர்ந்த ஆன்மாக்கள் வெகு சிலரே!
"காதற்ற ஊசியும் வராது காண் கடைவழிக்கே" போன்ற ஒரு வாக்கியம் போதும்,
வாழ்கை போக்கையே மாற்றிக்கொள்ள,
இசை இயற்றி நடுத்தர ஆன்மாக்களுக்கு துடுப்பு நீட்ட!
Aug 30, 2024
மெய் சிலிர்த்தது!
சீடன்: மெய் சிலிர்கிறதே! இது என்ன உணர்வு?
குரு: அருளின் அருகாமை
சீடன்: அருகாமையா? அருளை என்னுள் உணர்வது எப்படி?
குரு: அமைதி அடை
சீடன்: முடியவில்லை
குரு: தடுப்பது எது?
சீடன்: __________
குரு: அதில் ஆர்வம் தீட்டு
(சில நாட்கள் பிறகு)
சீடன்: அறிந்து கொண்டேன்.
குரு: அதில் ஆற்றல் பெருக்கு
(சில திங்கள் கடந்து)
சீடன்: ஆற்றல் பெருக்கினேன். பல போட்டிகள் வென்றேன்.
குரு: அறிவு வளர்
சீடன்: எதற்கு?
குரு: ஆற்றல் குன்றும்
(சில வருடங்கள் பிறகு)
சீடன்: அறிவாளி என்றுணர்ந்தேன்
குரு: அறம் உணர்
சீடன்: அறிவு போதாதா?
குரு: அறிவு பிழைக்கும்
(சில வருடங்கள் பிறகு)
சீடன்: அறம் உணர்ந்தேனா என்று தெரியவில்லையே?
குரு: இறைத்தேடல் ஊற்றெடுத்ததா?
சீடன்: ஆம்
குரு: அய்யனை தேடு
(சில வருடங்கள் பிறகு)
சீடன்: அருள் பெற்றேன்
குரு: தெரியும்
சீடன்: எப்படி?
குரு: மெய் சிலிர்த்தது!
குரு: அருளின் அருகாமை
சீடன்: அருகாமையா? அருளை என்னுள் உணர்வது எப்படி?
குரு: அமைதி அடை
சீடன்: முடியவில்லை
குரு: தடுப்பது எது?
சீடன்: __________
குரு: அதில் ஆர்வம் தீட்டு
(சில நாட்கள் பிறகு)
சீடன்: அறிந்து கொண்டேன்.
குரு: அதில் ஆற்றல் பெருக்கு
(சில திங்கள் கடந்து)
சீடன்: ஆற்றல் பெருக்கினேன். பல போட்டிகள் வென்றேன்.
குரு: அறிவு வளர்
சீடன்: எதற்கு?
குரு: ஆற்றல் குன்றும்
(சில வருடங்கள் பிறகு)
சீடன்: அறிவாளி என்றுணர்ந்தேன்
குரு: அறம் உணர்
சீடன்: அறிவு போதாதா?
குரு: அறிவு பிழைக்கும்
(சில வருடங்கள் பிறகு)
சீடன்: அறம் உணர்ந்தேனா என்று தெரியவில்லையே?
குரு: இறைத்தேடல் ஊற்றெடுத்ததா?
சீடன்: ஆம்
குரு: அய்யனை தேடு
(சில வருடங்கள் பிறகு)
சீடன்: அருள் பெற்றேன்
குரு: தெரியும்
சீடன்: எப்படி?
குரு: மெய் சிலிர்த்தது!
Mar 7, 2024
வலி ஒன்றுதான் பலவீனம்
வலி ஒன்றுதான் மனிதனின் பலவீனம்
பசி பிணி வதை மூப்பு யாவும் வெவ்வேறு வகை வலியே
மனவேதனை பயம் ஏமாற்றம் நிராகரிப்பு யாவும் வலியே
வலி தவிர்க்க அனைத்தையும் அடகு வைக்கும் மந்தையில்
எவ்வலியையும் ஏற்க ஏதோ ஒரு காரணம்
கண்டு துணிபவனே முழுமைபெறுகிறான்
அங்கே ஒரு ஏஷுவா
இங்கே ஒரு புத்தர்
எங்கும் பல சித்தர்
அங்கே ஒரு ஹனுமன்
இங்கே ஒரு ஆண்டாள்
என்றோ ஒரு திண்ணன்
எங்கோ ஒரு சேகுவேரா
அன்று இரு மருதர்கள்
இங்கு ஒரு பகத்தும் போஸும்
எங்கோ ஒரு சாக்ரடீஸ்
அன்று ஒரு திருவேங்கடர்
இங்கு ஒரு பாரதி
என்று வீரர்களின் பட்டியல்
வாழையடி வாழையாய்
தொடர்ந்து கொண்டே இருக்கும்
சிறு வலிகளுக்கு சிணுங்கும் வேளையில்
இவர்களில் சரித்திரம் அவ்வலி மறக்க செய்தால்
உன் வீரமும் துளிர்விட தொடங்கிவிட்டது
பசி பிணி வதை மூப்பு யாவும் வெவ்வேறு வகை வலியே
மனவேதனை பயம் ஏமாற்றம் நிராகரிப்பு யாவும் வலியே
வலி தவிர்க்க அனைத்தையும் அடகு வைக்கும் மந்தையில்
எவ்வலியையும் ஏற்க ஏதோ ஒரு காரணம்
கண்டு துணிபவனே முழுமைபெறுகிறான்
அங்கே ஒரு ஏஷுவா
இங்கே ஒரு புத்தர்
எங்கும் பல சித்தர்
அங்கே ஒரு ஹனுமன்
இங்கே ஒரு ஆண்டாள்
என்றோ ஒரு திண்ணன்
எங்கோ ஒரு சேகுவேரா
அன்று இரு மருதர்கள்
இங்கு ஒரு பகத்தும் போஸும்
எங்கோ ஒரு சாக்ரடீஸ்
அன்று ஒரு திருவேங்கடர்
இங்கு ஒரு பாரதி
என்று வீரர்களின் பட்டியல்
வாழையடி வாழையாய்
தொடர்ந்து கொண்டே இருக்கும்
சிறு வலிகளுக்கு சிணுங்கும் வேளையில்
இவர்களில் சரித்திரம் அவ்வலி மறக்க செய்தால்
உன் வீரமும் துளிர்விட தொடங்கிவிட்டது
Mar 6, 2024
தியாகமும் தியானமும்
தியாக பாதை
தனது நேரம் பலம் பொருள் செல்வாக்கு மற்றும் உயிராற்றல் போன்றவற்றை மற்ற உயிர்கள் மேம்பட செலவிடுவது.
பயணிக்க நல்லுணர்வு வேண்டும். சகிப்பு வேண்டும்.
தன்னிறைவு வாய்க்கும்.
பொதுநலத்தில் தொடங்கி சுயநலத்தில் முடிவது.
தியான பாதை
பலம் பொருள் செல்வாக்கு துறந்து, தனது நேரத்தையும் உயிராற்றலையும் கொண்டு அகம் புகுந்து பயணிப்பது.
பயணிக்க நல்லறிவு வேண்டும். தொய்வு வேண்டும்.
ஞானம் வாய்க்கும்.
சுயநலத்தில் தொடங்கி பொதுநலத்தில் முடியும்.
தனது நேரம் பலம் பொருள் செல்வாக்கு மற்றும் உயிராற்றல் போன்றவற்றை மற்ற உயிர்கள் மேம்பட செலவிடுவது.
பயணிக்க நல்லுணர்வு வேண்டும். சகிப்பு வேண்டும்.
தன்னிறைவு வாய்க்கும்.
பொதுநலத்தில் தொடங்கி சுயநலத்தில் முடிவது.
தியான பாதை
பலம் பொருள் செல்வாக்கு துறந்து, தனது நேரத்தையும் உயிராற்றலையும் கொண்டு அகம் புகுந்து பயணிப்பது.
பயணிக்க நல்லறிவு வேண்டும். தொய்வு வேண்டும்.
ஞானம் வாய்க்கும்.
சுயநலத்தில் தொடங்கி பொதுநலத்தில் முடியும்.
Feb 24, 2024
உன்னத நிலை
உடை கழிவு துவைத்தால் விலகும்
உடல் கழிவு நீராட நீங்கும்
மான கழிவு வெற்றியில் மறக்கும்
மன கழிவு உன்மத்தத்தில் தளரும்
உணர்வால் பொய்த்தல் உயிர் பிணியாகும்
குவிந்த கர்மவினை அடுக்குகளின் அறிகுறியாகும்
உணர்வு பொய்யாதிருத்தலே,
உடல் கழிவு நீராட நீங்கும்
மான கழிவு வெற்றியில் மறக்கும்
மன கழிவு உன்மத்தத்தில் தளரும்
உணர்வால் பொய்த்தல் உயிர் பிணியாகும்
குவிந்த கர்மவினை அடுக்குகளின் அறிகுறியாகும்
உணர்வு பொய்யாதிருத்தலே,
ஆன்மீக முன்னேற்றத்தின் அளவுகோல்!
உணர்வு தூய்மையே உன்னத நிலை!
உணர்வு தூய்மையே உன்னத நிலை!
எதற்கு?
அறிவு எதற்கு?
சுழற்சி முறைகளை கண்டு களைய.
துணிவு எதற்கு?
தற்காப்பை தற்காலிகமாக தள்ளி வைக்க.
அழகு எதற்கு?
அறிவிழந்து துணிவ்வொடுங்கி தன்னையும் மறந்து வியக்க.
செல்வ வளம் எதற்கு?
அறிவால் பற்றாக்குறை அறிந்து, துணிவாய் தீர்க்க.
செல்வாக்கு எதற்கு?
நம்பினோரை நல்வழி நடத்த.
சேவைகள் எதற்கு?
பொதுநலம் பேனி, சுயநலம் கடக்க.
நட்ப்பு எதற்கு?
நம்பிக்கை பழக.
காதல் எதற்கு?
கர்வம் தகர்க்க.
மகப்பேறு எதற்கு?
சுயரசனையை கடக்க.
சுழற்சி முறைகளை கண்டு களைய.
துணிவு எதற்கு?
தற்காப்பை தற்காலிகமாக தள்ளி வைக்க.
அழகு எதற்கு?
அறிவிழந்து துணிவ்வொடுங்கி தன்னையும் மறந்து வியக்க.
செல்வ வளம் எதற்கு?
அறிவால் பற்றாக்குறை அறிந்து, துணிவாய் தீர்க்க.
செல்வாக்கு எதற்கு?
நம்பினோரை நல்வழி நடத்த.
சேவைகள் எதற்கு?
பொதுநலம் பேனி, சுயநலம் கடக்க.
நட்ப்பு எதற்கு?
நம்பிக்கை பழக.
காதல் எதற்கு?
கர்வம் தகர்க்க.
மகப்பேறு எதற்கு?
சுயரசனையை கடக்க.
எதற்கு?
ஆடல் பாடல் கேளிக்கையும் எதற்கு?
முன்னும் பின்னும் உலவும் மனத்தை
இங்ஙனம் நிறுத்தி களிப்பதற்கு.
ஆர்வமும் ஈர்ப்பும் கல்வியும் எதற்கு?
பரவிக்கிடக்கும் மனோசக்தியை ஒன்று திரட்டி
ஓரிடத்தில் கவனம் வைத்து பழகுவதற்கு.
முயற்சியும் பயிற்சியும் உழைப்பும் எதற்கு?
நம் நேரத்தையும் கவனத்தையும் கவர்ந்து வீணாக்கும்
செயல்களில் வசப்படாமல் ஒழுக்கம் பயில்வதற்கு.
பூசையும் தொழுகையும் ஆன்மீகமும் எதற்கு?
விருப்பு வெறுப்பு கொண்ட மனம்
தக்கதொரு ஆளுமையை பற்றி நடுநிலை அடைவதற்கு.
தியானமும் தவமும் யோகமும் எதற்கு?
கவனத்தில் நிபுனமும் முயற்சியில் வெற்றியும் பலகண்டு
தானாய் தோன்றும் தொய்வால் மறுபிறப்பு அறுப்பதற்கு.
முன்னும் பின்னும் உலவும் மனத்தை
இங்ஙனம் நிறுத்தி களிப்பதற்கு.
ஆர்வமும் ஈர்ப்பும் கல்வியும் எதற்கு?
பரவிக்கிடக்கும் மனோசக்தியை ஒன்று திரட்டி
ஓரிடத்தில் கவனம் வைத்து பழகுவதற்கு.
முயற்சியும் பயிற்சியும் உழைப்பும் எதற்கு?
நம் நேரத்தையும் கவனத்தையும் கவர்ந்து வீணாக்கும்
செயல்களில் வசப்படாமல் ஒழுக்கம் பயில்வதற்கு.
பூசையும் தொழுகையும் ஆன்மீகமும் எதற்கு?
விருப்பு வெறுப்பு கொண்ட மனம்
தக்கதொரு ஆளுமையை பற்றி நடுநிலை அடைவதற்கு.
தியானமும் தவமும் யோகமும் எதற்கு?
கவனத்தில் நிபுனமும் முயற்சியில் வெற்றியும் பலகண்டு
தானாய் தோன்றும் தொய்வால் மறுபிறப்பு அறுப்பதற்கு.
Feb 7, 2024
எது சைவம்?
அசைவின்றி அமர்கையில்
உள்ளிறங்கும் அமிழ்தை
மட்டும் உண்டு
உலவுபவனே சைவன்
உள்ளிறங்கும் அமிழ்தை
மட்டும் உண்டு
உலவுபவனே சைவன்
Jan 26, 2024
விடுதலையின் மூன்று நிலைகள்
மனச்சலனம் குற்றவுணர்ச்சி அவமானம் மேலோங்க
சுயஅன்பு சுயமரியாதை தன்னம்பிக்கை குறைபட
பழிவாங்குதல் அவமதித்தல் இகழ்ச்சி வஞ்சித்தல்
யாவும் மூளைத்தண்டு மகார திரவத்தில் தேங்கியுள்ள குறைகள்!
இவற்றை கலைவதே முதல் நிலை வைணவம்!
மண் பொன் சுகம் புகழ் மீது ஆசை
வாழ்கை தேங்காமல் வழிநடத்தும் ஊட்டச்சத்து
தலைதெறிக்கும் ஓட்டத்தை கட்டுப்படுத்தும்
பயமென்ற கடிவாளம் நகாரத்தில் ஒடுங்கியுள்ளது
இவற்றை கடப்பதே இரண்டாம் நிலை பௌத்தம்!
வாழ்கை சூழலும் வந்து போகும் உறவுகளும்
கர்மவினை கழிக்கும் கிரஹ சாரத்தின் விளைவு
இதன் கூறு கண்டுணர்ந்து வாசி தொட்டு
வினைகள் களைந்து இறையருள் பெறுவதே
மூன்றாம் நிலை சித்தத்துவமான சைவம்!
இவ்வாறு முத்தீயை கடந்தவர் மட்டுமே
ஆகாய யகார பதிவுகளை ஆராயலாம்
புது பதிவுகளை பதிவிடலாம்
இறைவனுடன் ஐக்கியமாகலாம்
சுயஅன்பு சுயமரியாதை தன்னம்பிக்கை குறைபட
பழிவாங்குதல் அவமதித்தல் இகழ்ச்சி வஞ்சித்தல்
யாவும் மூளைத்தண்டு மகார திரவத்தில் தேங்கியுள்ள குறைகள்!
இவற்றை கலைவதே முதல் நிலை வைணவம்!
மண் பொன் சுகம் புகழ் மீது ஆசை
வாழ்கை தேங்காமல் வழிநடத்தும் ஊட்டச்சத்து
தலைதெறிக்கும் ஓட்டத்தை கட்டுப்படுத்தும்
பயமென்ற கடிவாளம் நகாரத்தில் ஒடுங்கியுள்ளது
இவற்றை கடப்பதே இரண்டாம் நிலை பௌத்தம்!
வாழ்கை சூழலும் வந்து போகும் உறவுகளும்
கர்மவினை கழிக்கும் கிரஹ சாரத்தின் விளைவு
இதன் கூறு கண்டுணர்ந்து வாசி தொட்டு
வினைகள் களைந்து இறையருள் பெறுவதே
மூன்றாம் நிலை சித்தத்துவமான சைவம்!
இவ்வாறு முத்தீயை கடந்தவர் மட்டுமே
ஆகாய யகார பதிவுகளை ஆராயலாம்
புது பதிவுகளை பதிவிடலாம்
இறைவனுடன் ஐக்கியமாகலாம்
குரு தட்சணை
குருவின் தாட்சண்யம் கிடைக்க
குருவிற்கு தட்சணை தரவேண்டும்
ஆர்வமும் ஆவலும் அவிந்த வேட்கையும்
பொறுமையும் அடக்கமும் நிறைந்த பணிவும்
இத்தட்சணைக்கு இணங்காத குருவும் இல்லை
இம்மாணவனுக்கு விளங்காத பாடமும் இல்லை
குருவிற்கு தட்சணை தரவேண்டும்
ஆர்வமும் ஆவலும் அவிந்த வேட்கையும்
பொறுமையும் அடக்கமும் நிறைந்த பணிவும்
இத்தட்சணைக்கு இணங்காத குருவும் இல்லை
இம்மாணவனுக்கு விளங்காத பாடமும் இல்லை
Jan 2, 2024
தன்னை அறிய முயன்றால்
தன்னை அறியும் முயற்சியில்..
மன குறைகள் கண்டறிந்து உதிருங்கள்
மன நிறைவு பல அனுபவியங்கள்
உணர்வொடுக்கம் வாய்க்க வாய்ப்புள்ளது
அங்ஙனமே வாய்த்தால்..
உடலியக்கம் சீர்படும்
உயிராற்றல் மேம்படும்
ஞானமும் விரிய வாய்ப்புண்டு
அங்ஙனமே விரிந்தால்..
உள்ளுணர்வு பொய்யாது
ஆன்ம கூற்று தெளிவாய் விளங்கும்
இறையாற்றலும் உணர்ந்தூறலாம்
மன குறைகள் கண்டறிந்து உதிருங்கள்
மன நிறைவு பல அனுபவியங்கள்
உணர்வொடுக்கம் வாய்க்க வாய்ப்புள்ளது
அங்ஙனமே வாய்த்தால்..
உடலியக்கம் சீர்படும்
உயிராற்றல் மேம்படும்
ஞானமும் விரிய வாய்ப்புண்டு
அங்ஙனமே விரிந்தால்..
உள்ளுணர்வு பொய்யாது
ஆன்ம கூற்று தெளிவாய் விளங்கும்
இறையாற்றலும் உணர்ந்தூறலாம்
Subscribe to:
Comments (Atom)