Feb 19, 2023

இறைவா போற்றி

இறைவா போற்றி!
ஜோதியாய் நின்று எம்மை அசைக்கும் அருளே போற்றி
அசைவதற்கு நீ அளித்த கதியே போற்றி
உனதாற்றல் உணர்விக்கும் ஜீவனே போற்றி
உன்னை உணர வழிவகுக்கும் உயிரே போற்றி
உன்னை அறிய நீ அளித்த உடலே போற்றி
உடலில் நீ கொடுத்த பலமே போற்றி, மனத் திடமே போற்றி
ஓயாமல் ஊக்குவிக்கும் உன் விசையே போற்றி

செல்வங்கள் கொடுத்து நிறைவை அளித்தாய் நின் தயவே வாழ்க
இன்பங்கள் காட்டி களங்கங்கள் களைத்தாய் நின் பரிவே வாழ்க
மகிழ்வை ஊட்டி மனதை நிறைந்தாய் நின் தாய்மை வாழ்க
ஆனந்தம் அளித்து முழுமை கொடுத்தாய் நின் கருணை வாழ்க

மாயை விளக்கி தெளிவை அளித்த குருவே சரணம்
அறிவை தீட்டி ஞானம் புகுத்தும் குருவே சரணம்
ஞானம் காட்டும் பாதையில் நிந்தன் பாதம் சரணம்
இறைவா சரணம்
சரணம் சரணம்
Posted on by Hari