உறக்கத்திற்கு அடிமையாய் இருக்கும் வரை,
ஊக்கம் அடையலாகாது!
இரைக்கு அடிமையாய் இருக்கும் வரை,
இறைநிலை அறியலாகாது!
ருசிக்கு அடிமையாய் இருக்கும் வரை,
ஆரோக்கிய குறைபாட்டில் உழல்வாய்!
காமத்திற்கு அடிமையாய் இருக்கும் வரை,
மனப்போராட்டம் விலகாது!
எதை பற்றுவது எதை விடுவது,
எல்லாம் உன் விருப்பமே!
காரணமும் காரியமும் பின்னி பிணைந்தவை,
பிரித்து சுகிக்கலாகாது!
எழுச்சி காரணம்:
--------------------------
ஒண்ணான மவுனமென்றே யோகம் விட்டால்
ஒருபோதுஞ் சித்தியில்லை வாதந் தானும்
பெண்ணார்தம் ஆசைதன்னை விட்டு வந்தால்
பேரின்ப முத்திவழி பேசுவேனே!
- உரோம ரிஷி