Dec 29, 2017

உறவுகள்

மழலையின் உதடுகள் மூடி திறப்பது
மெல்லினத்தில் அம்மா, வல்லினத்தில் அப்பா
தன் மனை ஆள்பவள் மனையாள்
சக உதிரம் கொண்டவன் சகோதரன் (சக-உதிரன்)
மைதுனம் கொண்டு வந்த உறவு மைத்துனன்
பித்ருவின் பிரதிபலிப்பு மகம், எனவே மகன்
தன் பெயரை நீட்டிப்பவன் பெயரன்
உறவுமுறைகள் வெற்று சொற்கள் அல்ல!
பொருள் அறிந்து உரைக்க, ஒற்றிய ரசாயனம் சுரக்கும்!!

Posted on by Hari

Dec 22, 2017

ஆருயிரே!

சந்திக்கும் முன்பே உன்னை நேசித்தேன்
உன்னுடன் பேச புது மொழிகள் பயின்றேன்
நிதம் விழித்தெழ உன் அழகை ரசித்தேன்
என்வினை பயன்கள் உனக்கே என்றிருந்தேன்
உன் குறும்புகள் ரசித்து என் கனவுகள் மறந்தேன்
ஒரே ஒரு முறை நீ அழ சிரித்தேன்
என் மகளே! ஆருயிரே!
Posted on by Hari

Dec 9, 2017

ஏன்? என்ன? எப்படி?

என்னவென்று உணர ஒரு பெரும் பயணம்
ஏன் என்று அறிய பல பிறப்புக்கள்
எப்படி என்று உரைக்க பல தளங்கள்
முன்னும் பின்னும் சுழற்றி அடிக்கும் சூழல்கள்
இதில் எதை வெறுக்கிறாய்?

இப்பெரிய ராட்டினத்தில் விரும்பி ஏறியவன் நீ!
மேலும் கீழும் சுற்றுகிறது சுழல்கிறது
அச்ச்ம் துக்கம் ஆனந்தம் அலை மோதுகிறது
இதில் களிப்பு மட்டும் வேண்டும்
அசௌகரியங்கள் வேண்டாம் என்று கதறுகிறாய்

இவ்விரண்டும் எனக்கு வேண்டாம்
என்று ஒதுங்குதல் தேக்கம்
அத்தேக்கத்தின் அறிகுறியே ஏக்கம்
இரண்டையும் ஒரு கை பார்க்கிறான்
என்று ரசித்தல் வாழ்கை
அதனின் வெளிப்பாடே பரவசம்

வாழ்ந்து பார்!

அசௌகரியமும் ஓர் அனுபவமே
உடனே விலகி ஓட முயலாதே
வலி பொறுத்து, அது சொல்ல வருவதை ஆராய்
அதன் வேலையை அது செய்து செல்லும்
உனது தன்மையும் சூழலும் மேம்படும்
Posted on by Hari

தூண்டியது எது?

இன்று உன் உணர்ச்சியை தூண்டியது எது?
அதுவே நீ இன்று கடக்க வேண்டிய தடை

சிந்தை சிதறாமல் அனுபவித்தால் கடக்கலாம்
அற்பம் என அறிவால் அறிந்தும் கடக்கலாம்
அருளால் முன் வினைகளை கிரஹித்து கடக்கலாம்
ஆசி இருந்தால் காற்றென கரைத்தும் கடக்கலாம்

கடக்கும் வரை சுழல்வாய், சலிக்கும் வரை சுழல்
சலிப்பை அறிய பழகு, அறிந்த உடனே விலகு!

Posted on by Hari

யார் சுவாமி?


இறையின்பால் சரண் புகுந்தவன் பக்தன்
இடையூறுகளை அகற்ற 
உடல் மனம் தயார் படுத்துபவன் யோகி
தன்னை தனிப்படுத்தி அமைதி தேடுபவன் துறவி 
தவம் பழகுபவன் தவசி
பழகி தெளிந்தவன் ஞானி
தெளிந்து களித்திருப்பவன் மௌனி (முனி)
தெளிந்ததை பயில்விப்பவன் ரிஷி
விருப்பத்திற்கேட்ப உடல் உயிர் பிரித்து சேர்த்து
இறை கட்டளை செயலாக்குபவன் சித்தன்
பேரண்ட இயக்கத்தின் பொறுப்பேற்றவன் இறைவன்
Posted on by Hari

உணர்வு.. அறிவு.. உள்..

அறம், செயல், உணவு, உறக்கம்
யார் சொல்லினும் கேட்காதே
உன் உணர்வை நம்பி செயல்படு
பாரம்பரியம் வழி வகுக்கும்

உடை, உபப்பொருள், களிப்பு, கேளிக்கை
அறிவாளர் அறிவுரை கேட்டு நட
அறிவை நம்பு
அனுபவம் வழிகாட்டும்

குறிக்கோள், உறவுகள், சாகசம், ஆர்வம்
உள்ளிருந்து உதிப்பவை
உணர்திறன் தீட்டினால்
ஆன்ம துடிப்பால் அறியலாம்

Posted on by Hari

அறிதல்.. அறிவு.. ஞானம்..

ஒருவர் சொல்ல கேட்டு
படித்து பார்த்து
தொட்டு ருசித்து
ஞாபகத்தில் ஏற்றுவது
மெய்யென அறிதல்!

எங்கும் பார்க்கவில்லை
எதுவும் கேட்கவில்லை
அனால் இது தான் நடக்கும்
அதர்க்கிதுவே காரணம்
என்ற தெளிவே அறிவு!

தான் உணர்ந்ததை
மற்றவருக்கு விளக்கலாகாது
வழி காட்டலாம்
துணை செல்லலாகாது
அதுவே ஞானம்!
Posted on by Hari

ஒரு நிகழ்வுக்காக நீ.. உனக்காக பல நிகழ்வுகள்..

ஒரு நிகழ்வுக்காக நீயும்
உனக்காக பல நிகழ்வுகளும்
இங்கு அரங்கேறி கொண்டிருக்கிறது

தகுதிக்கு தக்கன செயல்
தேடுவதை விட்டு
செயலுக்கு மிஞ்சிய
தகுதிகளை சேர்

செய்யும் வினைகள்
மீதம் இல்லாமல்
முழு மனத்தோடு
சீரென செய்

அறிவும் ஆற்றலும்
தேங்கும் போது
புதிய சிந்தையில்
ஆர்வம் தீட்டு

ஒரு நிகழ்வுக்காக நீயும்
உனக்காக பல நிகழ்வுகளும்
இங்கு அரங்கேறி கொண்டிருக்கிறது

முன் வினை பயனால்
வெற்றி கண்டோனை கண்டு
உன் முயற்சியதை
நீ நிந்தித்திடாதே

சமூக சூழலால்
சிலர் பெரும் மதிப்போடு
உன் சுய மதிப்பை
எடையிட்டு தாழாதே

மற்றவர் ஆசைகளும்
திணிக்கும் விளம்பரங்களும்
உன் கனவென நம்பி
மாயையில் மூழ்காதே

ஒரு நிகழ்வுக்காக நீயும்
உனக்காக பல நிகழ்வுகளும்
இங்கு அரங்கேறி கொண்டிருக்கிறது

இப்படி வாழ் இதை செய்
என சமூகம் சுழற்றும்
இதுவே வெற்றி அதில் பயனில்லை
என வீண் கருத்தை திணிக்கும்

உன் வெற்றியை நீ நிர்ணயி
உன் ஆழ்மன ஆனைக்கும்
அதையடையும் ஆற்றலுக்கும்
இடையின் நெருக்கமே வெற்றி

அறிவின் இடையூறின்றி
ஆசை குன்றினும்
உழைப்பால் ஆற்றல்
பெருகினும் வெற்றியே

ஒரு நிகழ்வுக்காக நீயும்
உனக்காக பல நிகழ்வுகளும்
இங்கு அரங்கேறி கொண்டிருக்கிறது

தக்க செயல் என
உள்ளுணர்வு செப்பினும்
தற்செயலே என
காரணறிவு கதைக்கும்

முற்செயலின் எதிர் வினை என
அஞ்ஞானம் பிதற்றினும்
இறைநிலையின் பேர் இயக்கம் என
மெய்ஞானம் விளக்கும்

உன் கல்வி இறையருகே
கொண்டு செல்லாவிடின்
அவ்வாற்றலை வியக்காவிடில்
நீ கற்றவையாவும் வீணே

ஒரு நிகழ்வுக்காக நீயும்
உனக்காக பல நிகழ்வுகளும்
இங்கு அரங்கேறி கொண்டிருக்கிறது
Posted on by Hari

1.. 1.. 2.. 3.. 5.. 8..

உடல் என ஒன்றும்
உயிர் என ஒன்றும்
ஒன்றென கலந்து
நினைத்த எண்ணங்கள்

குணங்கள் மூன்றும்
தோஷங்கள் மூன்றும்
உறைந்து கரைய
உரைத்த சொற்கள்

இந்திரியம் ஐந்தும்
பூதங்கள் ஐந்தும்
விலகி வழிவிட
செய்த செயல்கள்

சித்திகள் எட்டும்
ஐஸ்வர்யம் அட்டமும்
நீ விலகி நின்றினும்
நின் வசம் சேர்க்கும்

Posted on by Hari

எது அவசியம்?

உணவீட்டால் உடல் காத்தல்
உறைவிடம் உயிர் காத்தல் அத்யாவசியம்

உற்றுடன் உறவுடன் இன்புறுதல்
வெற்றிக்கு வீறுடன் செயல்படுதல் கர்மவசியம்

அடங்கி விரும்பி அகம்புகுதல்
உறைந்து தெளிந்து உயிருணர்தல் அருள்வசியம்

பயனற்ற துகளுக்கு மணமலைதல்
அறியாதோர் தூற்றுக்கு மனமுடைதல் அனாவசியம்

collecting food to preserve the body,
Shelter to preserve the life are essential.

celebrating and sharing love with family and friends,
yearning to win and hence driven actions are karmic settlements.

willfully turning inward,
experiencing inner peace are earned blessings

craving over useless scrapes,
hurt over stranger's opinions are absolutely futile
Posted on by Hari

உன் கருத்தின் மதிப்பென்ன?


நீ யார் என்ரே அறியாதவன்,
தன் கருத்திற்கு ஒத்தி நிற்க ஏற்பான்
எதிராயின் தூற்றுவான்
அவன் அனுபவிக்க அனுபவமானது
உன் வாக்கோ வீணானது

உன்னை அறிவாளன் என ஏற்றவன்,
உன் கருத்தினை ஏற்பான்
கடைபிடித்தல் சூழலுக்கேற்ப
அனுமானமாகி விதை விதைத்தது

உன்மேல் அலாதி மதிப்புடையவன்,
வேத வாக்கென வாழ்வான்
சீடனுக்கு குருவின் வாக்கு
ஆகமமாகி முழு பயனடைந்து

Posted on by Hari

விளைபொருள் விளைவி!

விளைபொருளை மறந்து
துணைப்பொருளுக்கு அலைவோரை
சராசரியானை ஆட்டுவிக்கும்
சமூக நுட்புணர்களின் சூழ்ச்சிக்கு சரிந்தோரே

உணவின் விளைபொருள் சத்து
அதனின் துணைப்பொருள் சுவை

கல்வியின் விளைபொருள் ஒழுக்கம்
அதனின் துணைப்பொருள் அறிவு

தொழிலின் விளைபொருள் உபாயம்
அதனின் துணைப்பொருள் செல்வம்

உறவின் விளைபொருள் அன்பு
அதனின் துணைப்பொருள் உதவல்

வினையின் விளைபொருள் தர்மம்
அதனின் துணைப்பொருள் புகழ்

முதுமையின் விளைபொருள் ஞானம்
அதனின் துணைப்பொருள் மதிப்பு

துணைப்பொருளால் உண்டு உபாயம்
நீர் மேல் தாமரைபோல் அனுபவி

ஆக்கப்பொருளே நிதமான வளர்ச்சி
ஆன்ம ஆணைப்படி விளைவி.

Posted on by Hari

இருளே இலக்காச்சு!

கர்ம வினையால்
ஆத்மாசை கருவாச்சு
கருதரித்து பிறப்பெடுக்க
ஜாதகம் உருவாச்சு!

கிரகத்திற் கேட்ப
வாஸ்து அமஞ்சாச்சு
சுற்றம் உற்றம் சேர
உறவும் நட்பும் சூழ்ந்தாச்சு!

எண்ணம் உணர்வும் ஊற்றெடுக்க
ரேகை வாக்குச் செயலாச்சு
பொன்னும் புகழும் ஈட்டெடுக்க
போற்றுவோர் சேர்ந்தாச்சு!

இப்பொற்றுவோரை ஈர்க்க
வந்த காரணம் மறந்தாச்சு
ரேகை வாஸ்து கிரகங்கள் பின்னோட
வழியும் சுழன்று இருளே இலக்காச்சு!

Posted on by Hari

பரி

பரியை தளர்த்தி நாமம் தொலைத்து
பரிணாம வளர்ச்சி என்று இயம்புகின்ற கூட்டத்தில்
பரியாதென்றும் நாம மெதுவென்றும் அறியாமல்
பரிகாரங்களில் சுழலும் மாந்தர்கள்
பரிகாரன் வந்து நற்சொல் உறைப்பின்
பரிகாசம் செய்து பயனிழந்தனரே!

Posted on by Hari

நீ கரு தரித்ததே!

நீ வாழும் உலகம்
நின்னை சுற்றி சுழலுமது
நீ உருவாக்கியது!

நீ ஈர்த்த மக்கள்
நீ விரும்பி வெறுத்த நிகழ்வுகள்
நின்னை வந்தடைந்தது!

நின் சிந்தையில் தோன்றிடாது
நின் ஆழ்மனம் அனுமதித்திடாது
நின் அனுவினையும் அசைக்கலாகாது!

நின் சுற்றமும் சூழலும்
நின் ஆற்றலும் தூற்றலும்
நீ கரு தரித்ததே!

Posted on by Hari

உன் செயல் சிறப்பு மிக்கதே!

ஆதாயப்படுபவன் போற்றுவான்
பாதிப்படைபவன் தூற்றுவான்
இவ்விரண்டும் இல்லா விமர்சகனின் கூற்று யாது?

இவனுக்கு ஏன் இந்த அக்கறை?
வீணாக மாட்டி கொள்கிறான்
என்று உதாசின படுத்தினாலும்

எனக்கு மட்டும் நேரம் இருந்தால்
பந்தங்கள் என்னை தடுத்திடாவிடில்
என்று ஆதங்க பட்டாலும்

உன் செயல் சிறப்பு மிக்கதே!

Posted on by Hari

பெண்ணியம்!

மழலையாய் மங்கையரை தாயென கருதி
பாலகனாய் பேதை பெதும்பையரை தமக்கை தங்கையாய் பழகி
விடலை பருவத்தில் மங்கையர் மேல் மனம் இலகினும் மதிப்பு குன்றிடா
காளை வயதில் மனையாளை மனதில் கொண்டு மடந்தையரை நோக்கி
மீளி மறவோனாக பெண்டிரை மகளென பார்த்து
முதுமகன் ஆனபின் ஆன் பெண் வேறுபாட்டை கடந்து
அனைவரும் மழலையே என அறிந்து 
முழுமையாக வாழ்ந்து முக்தி அடைவீர் ஆடவரே!

Posted on by Hari

யார் கற்பிப்பு சிறந்தது?

செல்வ ஈர்ப்பு கற்பித்தது தாய்
ஈயம் கற்றது தந்தையிடம்
ஈவதற்கு முன் ஈர்க்க வேண்டும்
ஈர்ப்பது ஈயா விடில் அது பாழ்.

Posted on by Hari

சிற்பிகள் காமுகர்களோ?

ஆலயத்தில் உள்ள சிற்பங்களை கண்டு
சிற்பிகள் காமுகர்களோ? என்று வினவினான் சாமான்யன்.

ஈன்றெடுக்கும் ஆண்மகனை கண்டு
சஞ்சலித்த தாயை கண்டீரோ?
காமத்து பாலில் கவி இயற்றி...
வண்ணம் தீட்டி...
சிலை வடித்த...
எம் கலை தாய்களும் அங்ஙனமே!
Posted on by Hari