Feb 24, 2024

எதற்கு?

அறிவு எதற்கு?
சுழற்சி முறைகளை கண்டு களைய.

துணிவு எதற்கு?
தற்காப்பை தற்காலிகமாக தள்ளி வைக்க.

அழகு எதற்கு?
அறிவிழந்து துணிவ்வொடுங்கி தன்னையும் மறந்து வியக்க.

செல்வ வளம் எதற்கு?
அறிவால் பற்றாக்குறை அறிந்து, துணிவாய் தீர்க்க.

செல்வாக்கு எதற்கு?
நம்பினோரை நல்வழி நடத்த.

சேவைகள் எதற்கு?
பொதுநலம் பேனி, சுயநலம் கடக்க.

நட்ப்பு எதற்கு?
நம்பிக்கை பழக.

காதல் எதற்கு?
கர்வம் தகர்க்க.

மகப்பேறு எதற்கு?
சுயரசனையை கடக்க.
Posted on by Hari