Feb 6, 2022

கயிறிழுப்பு போட்டி

ஈசனுக்கும் நீசனுக்கும் இடையே
கயிறிழுப்பு போட்டியில் சிக்கியவன் மனுசன்

சித்தம் சிவம் ஆனால் ஈசன்
செத்து சைவம் ஆனால் நீசன்

ஈசன் கயிற்றை இழுப்பதே இல்லை
நீசன் இழுப்போ ஓய்வதையே இல்லை

ஈசன் ஏன் இழுப்பதில்லை என்று கோவிக்கும் மழலையரே!
அது உன் தனிமனித சுதந்திரத்திற்கு அவன் தரும் மதிப்பு.

ஈசனின் இழுப்பை தாங்கும் சக்தியும் நமக்கில்லை!
எத்தருணத்திலும் அவன் கயிற்றை கைவிடுவதும் இல்லை.

நீசன் வென்றாலும் ஆட்டம் தொடரும்!
ஈசனிடமிருந்து வெகு தொலைவில், நீசனின் அடிமையாக!

நீசனின் இழுப்பை மீறி நீந்தினால் ஈசனை நெருங்கலாம்
நெருங்க நெருங்க நீசன் வலுவிழப்பான்

ஈசன் வென்றால் ஆட்டம் முடிந்தது!
ஏனெனில் நீயும் ஈசனாயிருப்பாய்!
Posted on by Hari