May 19, 2022

விளைநிலம் நீர் எரிபொருள் மின்சாரம்

இயற்கையை கசக்கி பிழிந்தெடுக்கும் சாறு,
விளைநிலம் நீர் எரிபொருள் மின்சாரம்.

அத்யாவசியம் ஆடம்பரம் கேளிக்கை 
என பயன்பாடு எதுவாயினும்,
இயற்க்கை அன்னையின் உதிரம் 
உறிஞ்சும் அட்டை பூச்சிகள் நாம்.

தேவையின் தெளிவின்றி மிஞ்சி பயன்படுத்தும்போது,
குருதி ருசி ரசித்து சுகிக்கும் அரக்கனாகிறோம். 
வீணாவதை நிறுத்த சிந்தை சாய்க்காதவன்
அன்னையின் துகிலுரிப்பை அலட்சிய படுத்தும் ஈனப்பிறவி.
Posted on by Hari