Mar 9, 2020

இயக்குநீர் போதை

எங்கிருந்தோ ஆட்கொண்ட ஆர்வத்தை தீட்டி
முழு மனத்தோடு முயர்ந்தது கற்று
உடலை வளைத்து உழைப்பை செலுத்தி
பல தோல்விகளை தொய்ந்து கடந்து
வென்றோரை கண்டு ஊக்கம் தேற்றி
வெற்றியின் ஓரிரு துகள்களை ருசித்து
வென்றோன் வலியோன் என பூரித்து
இயக்குநீர் போதையில் உழன்றிருந்தேன்!

சலிப்பு என்ற துடுப்பை நீட்டி
கருணையோடு கரை சேர்த்து
ஆர்வ ஊற்றை கடந்து காட்டி
குழவி வழியே அகந்தை அகற்றி
உம் வெற்றியில் எம் தோல்வியை பூட்டி
ஒளிந்திருந்த அனுபூதியை வெளிப்படுத்தி
களங்கமகற்றி ஈர்த்து அணைக்கும்
உன் குறும்பிற்கும் ஓர் சலிப்பு உண்டோ?
Posted on by Hari