விவாதம் சமவாதம்
விசாரணை பேட்டி
விதண்டாவாதம் கேலி
என்று பரிமாறும் கற்களை கொண்டு
இருவரை சுற்றி செவர் எழுப்பினால்,
வார்த்தைகள் தீர்ந்ததும்
பரஸ்பர தகவல் தொடர்பு
மௌனத்தில் முழுமை காணும்!
சிந்திய கற்கள் இடையில்
குவிந்து செவராய் நின்றால்,
கற்கள் தீர்ந்ததும்
நீ யாரோ நான் யாரோ!
பின்குறிப்பு:
வார்த்தைகளில் உண்மையை தேடாதீர்
வார்த்தைக்கும் உண்மைக்கும் சம்பந்தமே இல்லை.
உண்மை என்பது உணர்வின் வெளிப்பாடு
கண்களே உணர்வின் ஜன்னல்கள்.
வார்த்தைகளால் முழுதாய் வெளிப்படுவது
பேச்சு திறனும் மொழியின் நிபுணமும்.
விசாரணை பேட்டி
விதண்டாவாதம் கேலி
என்று பரிமாறும் கற்களை கொண்டு
இருவரை சுற்றி செவர் எழுப்பினால்,
வார்த்தைகள் தீர்ந்ததும்
பரஸ்பர தகவல் தொடர்பு
மௌனத்தில் முழுமை காணும்!
சிந்திய கற்கள் இடையில்
குவிந்து செவராய் நின்றால்,
கற்கள் தீர்ந்ததும்
நீ யாரோ நான் யாரோ!
பின்குறிப்பு:
வார்த்தைகளில் உண்மையை தேடாதீர்
வார்த்தைக்கும் உண்மைக்கும் சம்பந்தமே இல்லை.
உண்மை என்பது உணர்வின் வெளிப்பாடு
கண்களே உணர்வின் ஜன்னல்கள்.
வார்த்தைகளால் முழுதாய் வெளிப்படுவது
பேச்சு திறனும் மொழியின் நிபுணமும்.