Jun 16, 2022

நிலையற்றவற்றில் நாட்டம்.. நிலையான வாழ்வா?

நிலையற்றவற்றில் நாட்டம் வைத்து
நிலையாக வாழ நினைக்கும் மாக்களே

ஒரு நொடியில் தலைகீழாக மாறக்கூடிய அழகு செல்வம் புகழ்
மீது நாட்டம் ஒரே நொடியில் மறக்கடிக்கும்

திறமை ஆற்றல் அறிவு நாட்டம் கொண்டோர்
பல வருடங்கள் நினைவில் வாழ்வர்

சமூக சீர்பாட்டில் நாட்டம் கொண்டோர்
தசாப்தங்கள் நினைவில் நிற்பார்

மனிதகுலம் இயற்க்கை மேம்பாட்டில் நாட்டம்
நூற்றாண்டுகள் போற்றப்படுவர்

இறையடி பற்றி அவன்சரண் புகுந்தோர்
பொற்காலம் மக்களால் வணங்கப்படுவர்

மெய்ஞ்ஞானம் ஊற்றினால் இயற்கையின் இயக்கத்தில் நாட்டம் கொண்டோர்
மரணமில்லா பெருவாழ்வு என்ற நிலையான வாழ்வை பெறுவர்
Posted on by Hari