Nov 19, 2023

நவகிரஹ வழிபாடு

கிழக்கு நோக்கி
உயிரூற்றும் சூரியன்
அறிவூற்றும் புதன்
உணவூற்றும் சுக்கிரன்

தெற்க்கை நோக்கி
வீரியம் சுரக்கும் அங்காரன்
கொடுத்து கர்வமூட்டும் ராகு
கெடுத்து விரக்தியேற்றும் கேது

மேற்க்கே பார்த்து
தர்மம் காட்டும் சனீஸ்வரர்
கர்மம் கரைக்கும் சந்திரன்

வடக்கு நோக்கி
ஞானம் புகட்டும் குரு

என ஒன்பது கோள்களும்
நமது மேம்பாட்டின் அளவுகோல்
நமது போக்கின் வழிகாட்டிகள்
நமது சுயசோதனைச் சாவடிகள்

ஒன்பது முறை சுற்றி வந்து
விண்ணப்பித்து செல்லும் சடங்கல்ல!

ஒவ்வொன்றின் பயனுர்ந்து,
பணிந்து வணங்கி,
நன்றியுரைத்து பாருங்கள்!

சர்வ தோஷங்களும் விலகும்,
அனைத்து பாடங்களும் விளங்கும்!

Posted on by Hari