Mar 6, 2024

தியாகமும் தியானமும்

தியாக பாதை
தனது நேரம் பலம் பொருள் செல்வாக்கு மற்றும் உயிராற்றல் போன்றவற்றை மற்ற உயிர்கள் மேம்பட செலவிடுவது.
பயணிக்க நல்லுணர்வு வேண்டும். சகிப்பு வேண்டும்.
தன்னிறைவு வாய்க்கும்.
பொதுநலத்தில் தொடங்கி சுயநலத்தில் முடிவது.

தியான பாதை
பலம் பொருள் செல்வாக்கு துறந்து, தனது நேரத்தையும் உயிராற்றலையும் கொண்டு அகம் புகுந்து பயணிப்பது.
பயணிக்க நல்லறிவு வேண்டும். தொய்வு வேண்டும்.
ஞானம் வாய்க்கும்.
சுயநலத்தில் தொடங்கி பொதுநலத்தில் முடியும்.
Posted on by Hari