Mar 7, 2024

வலி ஒன்றுதான் பலவீனம்

வலி ஒன்றுதான் மனிதனின் பலவீனம்
பசி பிணி வதை மூப்பு யாவும் வெவ்வேறு வகை வலியே
மனவேதனை பயம் ஏமாற்றம் நிராகரிப்பு யாவும் வலியே

வலி தவிர்க்க அனைத்தையும் அடகு வைக்கும் மந்தையில்
எவ்வலியையும் ஏற்க ஏதோ ஒரு காரணம்
கண்டு துணிபவனே முழுமைபெறுகிறான்

அங்கே ஒரு ஏஷுவா
இங்கே ஒரு புத்தர்
எங்கும் பல சித்தர்

அங்கே ஒரு ஹனுமன்
இங்கே ஒரு ஆண்டாள்
என்றோ ஒரு திண்ணன்

எங்கோ ஒரு சேகுவேரா
அன்று இரு மருதர்கள்
இங்கு ஒரு பகத்தும் போஸும்

எங்கோ ஒரு சாக்ரடீஸ்
அன்று ஒரு திருவேங்கடர்
இங்கு ஒரு பாரதி

என்று வீரர்களின் பட்டியல்
வாழையடி வாழையாய்
தொடர்ந்து கொண்டே இருக்கும்

சிறு வலிகளுக்கு சிணுங்கும் வேளையில்
இவர்களில் சரித்திரம் அவ்வலி மறக்க செய்தால்
உன் வீரமும் துளிர்விட தொடங்கிவிட்டது
Posted on by Hari