இறை தூதராம் மழலையர்!
கொண்டு வந்த செய்தியை
சொல்ல தவிக்கும் திணரலே
அடம் அழுகை சிரிப்பு சிணுங்கல்
சொல்லும் யுக்தியை கற்கும் முன்
நம் சித்தாந்தத்தை திணித்து
அவர் மெய்ஞ்ஞானதிற்கு உறையிட்டு
நம்மைப்போல் ஆக்கி மகிழ்கிறோம்
மனம் தளராது மீண்டும் ஓர் தூதனை
நம்மிடம் அனுப்பும் இறைவனுக்கு
இத்தூதர் மீது அவ்வளவு நம்பிக்கையா?
அல்லது நம் மீது அலாதி கருணையா?
கொண்டு வந்த செய்தியை
சொல்ல தவிக்கும் திணரலே
அடம் அழுகை சிரிப்பு சிணுங்கல்
சொல்லும் யுக்தியை கற்கும் முன்
நம் சித்தாந்தத்தை திணித்து
அவர் மெய்ஞ்ஞானதிற்கு உறையிட்டு
நம்மைப்போல் ஆக்கி மகிழ்கிறோம்
மனம் தளராது மீண்டும் ஓர் தூதனை
நம்மிடம் அனுப்பும் இறைவனுக்கு
இத்தூதர் மீது அவ்வளவு நம்பிக்கையா?
அல்லது நம் மீது அலாதி கருணையா?