Sep 3, 2024

இயல் இசை நாடகம்

முதிர்ந்த ஆன்மாக்களுக்கு, இயல் ஒன்றே போதும்!
சொல்லும் கருத்தினை சட்டென்று உள்வாங்குவர்.

தளர்ந்த ஆன்மாக்கள் இசைக்கு மயங்குவர்
பலமுறை கேட்டு, ஒத்திசைத்து கருத்தினை கிரஹிப்பார்.

இளைய ஆன்மாக்களுக்கு, மாயை தேவை!
நடனமும் நாடகமும் உணர்வை பெருக்கும்.

அக்கதாப் பாத்திரமாகி, தன்னையே மறப்போர்,
உள்ளிறங்கி கருத்தினை உணர்வர்.

இளைய குழந்தைக்கு அதிக கவனமூட்டும் அன்னை போல்
வாழ்க்கையும் ஏராள நாடகம் இயற்றி,
இளைய ஆன்மாக்களை கரை தேற்றுவதிலே
அதிக நேரமும் சக்தியும் செலவிடும்.

முதிர்ந்த ஆன்மாக்கள் வெகு சிலரே!
"காதற்ற ஊசியும் வராது காண் கடைவழிக்கே" போன்ற ஒரு வாக்கியம் போதும்,
வாழ்கை போக்கையே மாற்றிக்கொள்ள,
இசை இயற்றி நடுத்தர ஆன்மாக்களுக்கு துடுப்பு நீட்ட!
Posted on by Hari