Sep 3, 2024

கலையின் தாத்பரியம் என்ன?

காரியம் உடல்கொண்டு செய்யப்படுவது
கருத்து அறிவை கூறு போடுவது
கலை என்பது உணர்வோடு உறவாடுவது
அது மூன்று நிலைகளில் முதிரும்

கலையின் முதல் நிலை
அடிப்படை அறிதல்
அதன் அறிவியல் பயின்று
பழகி படிப்படியாய் தேறுதல்

கலையின் இரண்டாம் நிலை
ஒரு உணர்வை சிறப்பாக வெளிப்படுத்துதல்
பாரதி கவிதை போல்
நன்நடிகனின் நடிப்பை போல்

கலையின் முதிர்ந்த நிலை
சுவைப்பவரின் உணர்வை முழுதாய் ஆக்கிரமித்தல்
உள்ளிறங்கி கண் கலக்கும் பாடல் போல்
திண்ணனின் காதல் கதையை போல்

முதிர்ந்த கலை ஆணவம் அழிக்கும்
முதிர்ந்த பின் தானே உதிரும்
கலைவாணியின் அருள் இன்றி முதிராது
நான் அகன்று அவள் செயல்பட திகட்டாது
Posted on by Hari