ஏன் என்று அறிய பல பிறப்புக்கள்
எப்படி என்று உரைக்க பல தளங்கள்
முன்னும் பின்னும் சுழற்றி அடிக்கும் சூழல்கள்
இதில் எதை வெறுக்கிறாய்?
இப்பெரிய ராட்டினத்தில் விரும்பி ஏறியவன் நீ!
மேலும் கீழும் சுற்றுகிறது சுழல்கிறது
அச்ச்ம் துக்கம் ஆனந்தம் அலை மோதுகிறது
இதில் களிப்பு மட்டும் வேண்டும்
அசௌகரியங்கள் வேண்டாம் என்று கதறுகிறாய்
இவ்விரண்டும் எனக்கு வேண்டாம்
என்று ஒதுங்குதல் தேக்கம்
அத்தேக்கத்தின் அறிகுறியே ஏக்கம்
இரண்டையும் ஒரு கை பார்க்கிறான்
என்று ரசித்தல் வாழ்கை
அதனின் வெளிப்பாடே பரவசம்
வாழ்ந்து பார்!
அசௌகரியமும் ஓர் அனுபவமே
உடனே விலகி ஓட முயலாதே
வலி பொறுத்து, அது சொல்ல வருவதை ஆராய்
அதன் வேலையை அது செய்து செல்லும்
உனது தன்மையும் சூழலும் மேம்படும்