நீ யார் என்ரே அறியாதவன்,
தன் கருத்திற்கு ஒத்தி நிற்க ஏற்பான்
எதிராயின் தூற்றுவான்
அவன் அனுபவிக்க அனுபவமானது
உன் வாக்கோ வீணானது
உன்னை அறிவாளன் என ஏற்றவன்,
உன் கருத்தினை ஏற்பான்
கடைபிடித்தல் சூழலுக்கேற்ப
அனுமானமாகி விதை விதைத்தது
உன்மேல் அலாதி மதிப்புடையவன்,
வேத வாக்கென வாழ்வான்
சீடனுக்கு குருவின் வாக்கு
ஆகமமாகி முழு பயனடைந்து